/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்
/
மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்
மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்
மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்
ADDED : ஆக 11, 2024 06:35 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வடுகன்புதுப்பட்டி கிராமத்தில், சில ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தினமும் 2 கி.மீ., காட்டுப்பகுதி வழியாக நடந்து வெண்டையம்பட்டி சாலைக்கு சென்று, பஸ் ஏறி பயணித்து வந்தனர்.
கடந்த, 5ம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தின் போது, வடுகன்புதுப்பட்டி மக்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், சீருடையுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளிக்க வந்தனர். பள்ளி சீருடையுடன் மாணவர்களை பார்த்த கலெக்டர் மிகவும் கோபமடைந்து, 'முதலில் மாணவர்களை பள்ளியில் விட்டு வாருங்கள்; பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்' என, கூறினார்.
கலெக்டர் உடனடியாக போக்குவரத்து துறை அலுவலர்களிடம் பேசினார். ஐந்து நாட்களில், சொரக்குடிபட்டியில் இருந்து இயக்கப்படும் தடம் எண் ஏ88 டவுன் பஸ் வெண்டையம்பட்டி வழியாக வடுகன்புதுப்பட்டி வரை நீட்டிப்பு செய்து நேற்று முன்தினம் முதல் இயக்கப்படுகிறது.
பஸ் இயக்கத்தை, நேற்று முன்தினம் இரவு எம்.பி., முரசொலி, திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

