/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தங்களுக்கு லாபம் தரக்கூடிய ஒரே நாடு, ஒரே தேர்தலை செயல்படுத்த பா.ஜ., நினைக்கிறது: எம்.பி., கனிமொழி

ADDED : செப் 21, 2024 10:19 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று 'கலைஞர் 100 வினாடி - வினா' போட்டி நடந்தது.
இதில், பங்கேற்ற எம்.பி., கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து மத்திய அமைச்சரவை தான் ஒப்புதல் கொடுத்துள்ளது. நாடு இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தி.மு.க., மற்றும் தமிழக முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே மொழி என எல்லாவற்றுக்கும் ஒரே நாடு என கூறிக் கொண்டிருக்கின்றனர். இது மாநிலங்களின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறபோது, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளின் ஐந்து ஆண்டு காலம் முடியாத போது அவற்றின் நிலை என்னவாகும்? அவற்றால் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பயன் என்ன? எந்த பயனும் இல்லாதபோது, பா.ஜ., தங்களுக்கு லாபம் தரும் என நினைத்து அவர்கள் செய்வதை தி.மு.க., நிச்சயமாக எதிர்க்கும்.
இதை போல பா.ஜ., தாங்கள் நினைக்கும் கருத்துக்களை நாட்டு மக்கள் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். இதை தி.மு.க.,வும், முதல்வரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
துாத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும். அப்படியொரு தவறு நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.