/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கூடுதல் நேரம் பஸ்கள் இயக்க கூறி நெருக்கடி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் அவதி
/
கூடுதல் நேரம் பஸ்கள் இயக்க கூறி நெருக்கடி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் அவதி
கூடுதல் நேரம் பஸ்கள் இயக்க கூறி நெருக்கடி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் அவதி
கூடுதல் நேரம் பஸ்கள் இயக்க கூறி நெருக்கடி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் அவதி
ADDED : மே 28, 2024 09:41 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திரகுமாரிடம், தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் ஆறுமுகம், துணை பொதுச் செயலர் சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் மதிவாணன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் வழங்கினார்.
அதில், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்பம் மற்றும் அலுவலக பிரிவுகளில் பணியாளர் விகிதம் குறைவாக உள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
அத்தியவாசிய குடும்ப தேவைகளுக்காக ஈட்டிய விடுப்பும், உடல் நல குறைவு காரணமாக மருத்துவ விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்புகள் இருப்பிலிருந்த போதும் என மறுத்து ஆப்சென்ட் போடப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பள இழப்பு ஏற்படுகிறது.
14வது ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு திருமண கடன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிபந்தனைகள் போட்டு நிராகரிப்பதால் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கும்பகோணம் கோட்டத்தில் உள்ள ஒரு சில கழகங்களில் பணிமனைகளையும் தகுதி சான்று பெரும் பிரிவும் இணைத்து செயல்பட வைத்துள்ளதால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வரும் துாரம் அதிகரித்துள்ளது. பஸ்சின் எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. பஸ்களின் குறைபாடுகள் பராமரிப்பு பாதிப்பு ஏற்படும்.
வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களை முழுமையாக இயக்கப்பட்ட பின், கூடுதல் இயக்கமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என நிர்பந்தம் செய்து சோர்வு நிலையில் உள்ள தொழிலாளர்களை கஷ்டப்படுத்துவதும், கட்டாயப்படுத்துவதும் கைவிட வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏ.ஐ.டி.யூ.சி., அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளத்தின் மாநில துணைத் தலைவர் மதிவாணன்; நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 கி.மீ., புறநகர் பஸ்களை இயக்க வேண்டும். டவுன் பஸ்களை காலை 5:00 மணிக்கு எடுத்தால் இரவு வரை பணி ஷிப்ட் இருக்கும். தற்போது ஆள்பாற்றக்குறையால் பகல் ஷிப்ட் முடிக்கும் தொழிலாளர்களை புறநகர் பஸ்களில் கூடுதலாக பணியாற்ற நிர்பந்தம் செய்கிறார்கள். இதை புறநகர் பஸ்களை 600 கி.மீ., இயக்கும் தொழிலாளர்களை கூடுதலாக வேறு ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்பை சந்தித்து, விபத்துகளுக்கு வழி வகுத்து விடுகிறது. இதற்கு அரசு தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் கண்டுக்கொள்வது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.