/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த இருவர் கைது தப்பி ஓடிய போது கை, கால் முறிவு
/
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த இருவர் கைது தப்பி ஓடிய போது கை, கால் முறிவு
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த இருவர் கைது தப்பி ஓடிய போது கை, கால் முறிவு
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த இருவர் கைது தப்பி ஓடிய போது கை, கால் முறிவு
ADDED : செப் 06, 2024 01:31 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், மானம்புசாவடியில், தமிழக அரசு பட்டு கூட்டுறவு சங்கம் உள்ளது. சங்கத்தில் வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரி, 65; மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தற்போது பணியாளர் பாற்றக்குறையால், தற்காலிக ஊழியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவருக்கு, நகை அணிந்து கொள்வதில் கொள்ளை பிரியம்.
பிரகதீஸ்வரி, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு சங்கத்தில் தனியாக இருந்த போது, ஸ்கூட்டரில் வந்த இருவர் பட்டு புடவை வாங்குவது போல வந்து, பிரகதீஸ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த வளையல், தோடு, நெக்லஸ் என, 15 சவரன் தங்க நகைகைளை பறித்துக்கொண்டு தப்பினர். நிலைகுலைந்து போன பிரகதீஸ்வரி, கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி., சோமசுந்தரம் மேற்பார்வையில், தனிப்படை போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிரகதீஸ்வரி சென்ற இடங்களில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, பிரகதீஸ்வரி வேலைக்கு வரும் போது, அவரை நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரில், இருவர் ஹெல்மெட் அணிந்தபடி பின் தொடர்ந்தது தெரிந்தது.
தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட, தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, ஆசிரியர் காலனியை சேர்ந்த பாலசந்தர், 35, சாந்தி நகரை சேர்ந்த செந்தில்குமார், 46, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் பிடித்தனர்.
போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற போது, ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில், செந்தில்குமாருக்கு கையிலும், பாலசந்தருக்கு காலிலும் முறிவு ஏற்பட்டது.
இருவரும் தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்களை, 10 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை எஸ்.பி., ஆஷிஷ்ராவத் வெகுவாக பாராட்டினார்.