/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வாக்கிங், செல்பி, மார்க்கெட் விசிட், டீக்கடை புதுவிதமான முறையில் ஓட்டு கேட்ட முதல்வர்

ADDED : மார் 24, 2024 01:57 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் முரசொலி, நாகை தொகுதியில் இ.கம்யூ., சார்பில் போட்டியிடும் செல்வராஜ் ஆகிய இருவரையும் ஆதரித்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வந்து தங்கிய முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 7:00 மணிக்கு, அன்னை விளையாட்டு மைதானத்தில் தி.மு.க., வேட்பாளர் முரசொலியை அழைத்து வாக்கிங் சென்றப்படி, அங்கிருந்த பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தப்படியும் ஓட்டுக்கேட்டார்.
பின், காமராஜ் காய்கறி மார்க்கெட்டில் விசிட் அடித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.
பின், கீழராஜ வீதியில் உள்ள டீக்கடையில், ஸ்டாலின் டீ குடிக்க அமர்ந்தார்.
அப்போது, அவருக்கு வழங்கிய டீ சூடாக இருந்ததால், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., நீலமேகம், டீ கோப்பையை வாங்கி, நன்றாக ஆற்றி, சூடு ஆறிய பின் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார்.
பின் அந்த டீயை ருசித்து குடித்து விட்டு, டீ குடிக்கும் சூடான பதத்திற்கு ஆற்றி உள்ளார் என்பது போல, எம்.எல்.ஏ.,வை ஒரு பார்வை பார்த்தார் முதல்வர் ஸ்டாலின்.