/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தேசிய போட்டியில் பங்கேற்க 15 மாணவர்களுக்கு அனுமதி
/
தேசிய போட்டியில் பங்கேற்க 15 மாணவர்களுக்கு அனுமதி
ADDED : டிச 25, 2024 02:41 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 15 மாணவர்கள், வரும், 26 முதல், 30 வரை ஒடிசாவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான, அகில இந்திய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.
அரியலுாரில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா செல்வதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துஉள்ளனர். அதற்கு, பல்கலைக்கழகமும் அப்போது அனுமதி அளித்திருந்தது..
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் சங்கர், 'மாணவர்கள் ஒடிசா செல்லக்கூடாது; மீறி சென்றால் மோசடியாக சான்றிதழ் தயார் செய்துஉள்ளதாக போலீசாரிடம் புகார் அளிப்பேன்' என மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து, நான்கு மணி நேரம் அனுமதிக்காக தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதன் பின், துணைவேந்தர் சங்கர், பல்கலைக்கழக விளையாட்டுதுறை பேராசிரியர் பிரபாகரிடம் மொபைலில் பேசி, மாணவர்கள் செல்ல அனுமதி அளித்துள்ளார்.
மாணவர்கள் கூறியதாவது:
அகில இந்திய தடகள போட்டியில் பங்கேற்க, மூன்று ஆண்டுகளாக பயிற்சி செய்து தயாராகினோம். பல்கலைக்கழக விடுதியில் வேறு மாணவர்கள் சிலரிடையே நடைபெற்ற பிரச்னையால், எங்களை ஒடிசா போட்டிக்கு செல்லக்கூடாது என மிரட்டி, அனுமதி மறுத்தனர்.
ஏற்கனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் புக்கிங் செய்த பணமும் வீணாகி விட்டது. கடும் மனஉளைச்சலுக்கு பிறகு புறப்பட்டு சென்றுள்ளோம்.
இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

