/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மறுவாழ்வு மையத்தில் இருந்த 15 வயது சிறுவன் தற்கொலை
/
மறுவாழ்வு மையத்தில் இருந்த 15 வயது சிறுவன் தற்கொலை
மறுவாழ்வு மையத்தில் இருந்த 15 வயது சிறுவன் தற்கொலை
மறுவாழ்வு மையத்தில் இருந்த 15 வயது சிறுவன் தற்கொலை
ADDED : ஆக 06, 2025 12:45 AM
திருக்கானுார்பட்டி:போதை மறுவாழ்வு மையத்தில், 15 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு பெற்றோர் இல்லாததால், பாட்டி பராமரிப்பில் வளர்ந்தார். சிறுவனுக்கு போதை பழக்கம் இருந்ததால், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டு, அதே பகுதி பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஜூலை 15ல் சிறுவன் தங்கியிருந்த இல்லத்தின் சுவர் ஏறி குதித்து வெளியேறினார்.
ஜூலை 16ம் தேதி இரவே போலீசார் சிறுவனை கண்டுபிடித்து, இல்ல காப்பாளரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இல்ல காப்பாளர், குழந்தைகள் நலவாரிய அதிகாரிகளிடம் சிறுவனை ஒப்படைத்துள்ளார்.
அதிகாரிகள், திருக்கானுார்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில், ஜூலை 18ம் தேதி சிறுவனை சேர்த்துள்ளனர். அங்கு தங்கியிருந்த சிறுவன், தான் தங்கியிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.