/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ராஜாகோரி சுடுகாட்டில் 1,500 மரக்கன்றுகள் நடவு
/
ராஜாகோரி சுடுகாட்டில் 1,500 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூன் 06, 2025 02:30 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், வடக்கு வாசல் பகுதியில், ராஜாகோரி சுடுகாடு அமைந்துள்ளது.
இந்த சுடுகாடு, மராட்டிய மன்னர் குடும்பத்துக்கான மயானமாக விளங்கியது. தற்போது, இந்த சுடுகாடு, தஞ்சை மாநகரில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
இதை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. உடல்கள் எரியூட்டப்படும்போது, புகை மாசு கிளம்பி, சுகாதாரத்திற்கு கேடாக இருந்தது.
இந்நிலையை மாற்ற திட்டமிட்ட, தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், கருவேல மரங்களை அகற்றி, மாசடைந்த சுடுகாடை மாசற்ற சோலையாக உருவாக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில், ராஜாகோரி சுடுகாட்டில் புங்கை, வேம்பு உள்ளிட்ட 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மரக்கன்றுகளை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்.பி., முரசொலி, எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், நீலமேகம் உள்ளிட்டோர் நட்டனர்.
இதில், பொதுமக்கள், துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.