/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறப்பு
/
தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறப்பு
தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறப்பு
தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறப்பு
ADDED : ஜூலை 11, 2025 10:11 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி, ஜே.சி.பி., ஆப்பரேட்டர் மற்றும் இளைஞர் பலியாகினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே சின்ன காங்கேயம்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி, 40; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். மனைவி பேபி ஷாலினியுடன் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, பூதலுாரில் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்தோணி ஆற்றில் திடீரென மூழ்கினார்; பேபி ஷாலினி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினரால், ஆற்றின் வேகத்தில் அந்தோணியை மீட்க முடியவில்லை.
திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படை வீரர்கள், சித்திரக்குடி பகுதியில் நேற்று காலை அந்தோணி உடலை மீட்டனர். பூதலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி சாலை, லட்சுமி விநாயகம் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ், 19; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் மானோஜிப்பட்டி பகுதி கல்லணை கால்வாயில் குளித்தார்.
அப்போது, அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்கள், இரவு முழுதும் தேடியும் லோகேஷ் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை செல்லம் பட்டி பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. கள்ளபெரம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.