/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஐம்பொன் சிலைகளை திருடிய 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
/
ஐம்பொன் சிலைகளை திருடிய 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
ஐம்பொன் சிலைகளை திருடிய 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
ஐம்பொன் சிலைகளை திருடிய 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
ADDED : ஜூன் 13, 2025 02:20 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், ஜெயின கோவிலில், ஐம்பொன் சிலைகளை திருடிய நான்கு பேருக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர், கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான, ஆத்தீஸ்வரஸ்வாமி என்கிற ஜெயின கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2020 ஜன., 18 இரவு, கோவிலில் இருந்த, மூன்று அடி உயர ஐம்பொன் ஆத்தீஸ்வரர் சிலை, தலா ஒன்றரை அடி உயர ஜினவாணி, ஜோலமணி வெண்கல சிலை உட்பட, 23 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கோவில் அறங்காவலர், தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்ததில், தஞ்சாவூர் சுங்கான்திடலைச் சேர்ந்த ராஜேஷ், 40, ரவி, 45, காவேரி நகரைச் சேர்ந்த சண்முகராஜன், 48, நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த விஜயகோபால், 37 ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 23 சிலைகளும் மீட்கப்பட்டது.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி மணிகண்ட ராஜா முன்னிலையில் நடந்தது. நேற்று முன்தினம், நான்கு பேருக்கும், தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.