sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

41% மக்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை :அண்ணாமலை பல்கலை பேராசிரியர் வருத்தம்

/

41% மக்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை :அண்ணாமலை பல்கலை பேராசிரியர் வருத்தம்

41% மக்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை :அண்ணாமலை பல்கலை பேராசிரியர் வருத்தம்

41% மக்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை :அண்ணாமலை பல்கலை பேராசிரியர் வருத்தம்


ADDED : ஜூலை 14, 2011 12:29 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: ''நமது நாட்டில் மக்கள் தொகையில் 31சதவீதம் பேரிடம் மொபைல்ஃபோன் உள்ளது.

ஆனால், 41 சதவீத மக்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை,'' என்று அண்ணாமலை பல்கலை பேராசிரியர் வருத்தம் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சென்றாண்டு தலைவரான பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். சென்றாண்டு செயலர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் ஆளுனர் வசீகரன் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர். புதிய தலைவராக ஆறுமுகம், செயலாளராக வின்சென்ட் பிரபாகரன், தொடர்ந்து சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். இதையடுத்து புதிய உறுப்பினர்களை மண்டலம்ண15ன் துணை ஆளுனர் மூர்த்தி சங்கத்தில் இணைத்தார். விழாவில், புதிய ர்வாகிகளை பாராட்டி மற்ற சங்க தலைவர்கள் பாலாஜி, சுவாமிமலை நாராயணன், சக்தி ரோட்டரி சங்க தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்ர மணியன், தாராசுரம் ரோட்டரி சங்க தலைவர், மகாமகம் ரோட்டரி சங்க தலைவர் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அண்ணாமலை பல்கலை பேராசிரியர் கதிரேசன் பேசிய தாவது: சேவை செய்வதற்காகவே ரோட்டரி சங்கங்கள் உள்ளது. சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றே ரோட்டரியில் அனைவரும் உறுப்பினர்களாகிறார்கள். உறுப்பினர்கள் ஆவது மூலம் நட்பு உலகம் விரிவடைகிறது. பொறுமை, கருணை, கடமை இந்த மூன்று குணாதிசியங்களும் ஒருவரிடம் இருந்தால் அவருக்கு தலைமைப்பண்பு தானாகவே வந்துவிடும். அந்த பண்பின் மூலம் அவர் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். ஒரு மரக்கன்றை ஒருவர் நடுகிறார். அந்த மரம் வளர்ந்து 50 ஆண்டு கழித்து பார்த்தால் அதன்மதிப்பு பல கோடி மதிப்பாக உயர்கிறது என்பதை விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த மரம் வளர்ப்பதால் மரம் வளர்ப்பவர்களுக்கு நன்மை ஏற்படுத்துவதுடன் பூமி வெப்ப மயமாதலையும் குறைத்து ஆரோக்கிய வாழ்க் கையை அளிக்கிறது. இந்தியா ஏழை நாடா?, பணக்கார நாடா? என்றால் பணக்கார நாடுதான். நமது நாட்டில் மக்கள் தொகையில் 31சதவீதம் பேரிடம் மொபைல்ஃபோன் உள்ளது. ஆனால், 41 சதவீத மக்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை என்பதுதான் உண்மை. 'நமது நாட்டில் இல்லாத வளங்களே இல்லை' என்று கூற முடியும். வளங்கள் அதிகம் இருக்கின்ற லையில் அவலங் கள் இல்லாத லையை உருவாக்க வேண்டும். பிரச்னையை கண்டு கவலைப் படாமல் இருக்க வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். வாய்விட்டு சிரிப்பதன் மூலம் மூளையில் ஒரு சுரப்பி சுரக்கின்றது. அந்த சுரப்பி உடல் முழுவம் பரவி உடலை துடிப்பு டன் செயல்பட செய்கிறது. ஆரோக்கியத்தை உருவாக்கு கிறது. அதனால் நாம் நமது காரியங்களில் வெற்றியை காண முடிகிறது. துயரமான சிந்தனையில் இருக்கும்போது மூளையில் சுரக்கப்படும் சுரப்பியால் உடலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே எல்லாரும் எல்லா நேரத்திலும் சிரித்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை யில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சங்க உறுப்பினர்கள் திலகன், டாக்டர் பார்த்தசாரதி, பொறியாளர் சிவக்குமார், வெங்கடேசன், பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். விழாவை சங்க உறுப்பி னர்கள் வக்கீல் கண்ணன், சாமிநாதன், அருணா ராஜவேல் ஆகியோர் தொகுத்து வழங் கினர். செயலாளர் வின்சென்ட் பிரபாகரன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us