/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
6 மாணவ - மாணவியருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு
/
6 மாணவ - மாணவியருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு
6 மாணவ - மாணவியருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு
6 மாணவ - மாணவியருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு
ADDED : ஜன 22, 2025 01:44 AM
தஞ்சாவூர்:கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஆறு மாணவ - மாணவியருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நீலத்தநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், நீலத்தநல்லுார் தெற்கு தெருவைச் சேர்ந்த இரண்டு மாணவ - -மாணவியருக்கு நேற்று முன்தினம் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இவர்கள் கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவ - மாணவியருக்கு நேற்று வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவர்களும் கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து, வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறி, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செல்ல அறிவுறுத்தினர். தஞ்சை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் நேற்று பரிசோதனை செய்தனர்.
செல்வகுமார் கூறுகையில், “குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பின், வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோரை அறிவுறுத்தியுள்ளோம். குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வுமுடிவு வந்த பிறகே முழு விபரங்கள் தெரியவரும்,” என்றார்.