/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பணத்தகராறில் தம்பியை கொன்ற 'பாசக்கார' அண்ணன்
/
பணத்தகராறில் தம்பியை கொன்ற 'பாசக்கார' அண்ணன்
ADDED : ஜூலை 08, 2025 04:50 AM
தஞ்சாவூர்: கடையின் வாடகை பணத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கட்டையால் தாக்கி கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர், கணபதி நகரை சேர்ந்த அறிவழகன், 46; கூலி தொழிலாளி. மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம், 41; திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்தனர். இவர்கள் இருவரின் தாய் பெயரில், கடைகள் உள்ளன. அவை வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு, 'வசூலிக்கப்பட்ட வாடகையை எனக்கு ஏன் கொடுக்கவில்லை?' என கேட்டு, மது போதையில் இருந்த அறிவழகன், தன் தம்பியை கட்டையால் தாக்கி, தப்பினார். பலத்த காயமடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தெற்கு போலீசார், அறிவழகனை நேற்று மதியம் கைது செய்தனர்.