/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
புராதன கட்டடங்கள் சீரமைப்பு தொல்லியல் இயக்குனர் தகவல்
/
புராதன கட்டடங்கள் சீரமைப்பு தொல்லியல் இயக்குனர் தகவல்
புராதன கட்டடங்கள் சீரமைப்பு தொல்லியல் இயக்குனர் தகவல்
புராதன கட்டடங்கள் சீரமைப்பு தொல்லியல் இயக்குனர் தகவல்
ADDED : பிப் 09, 2024 01:59 AM

தஞ்சாவூர்:தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மராட்டா தர்பார் மண்டபத்தில் 6.25 கோடி ரூபாய், சர்ஜா மாடி 9.42 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி நடக்கிறது. சேதமடைந்த கட்டுமானத்தை சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்ட மரபு பொருட்களைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் சீரமைக்கப்படுகிறது.
அதுபோல, 10 கோடி ரூபாயில் மதுரை திருமலை நாயக்கர் மஹால், 7 கோடி ரூபாயில் கவர்னர் மாளிகை, தரங்கம்பாடி கோட்டை என, 35 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.