/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பசுமைக்கரங்கள் திட்ட துவக்க விழா
/
பசுமைக்கரங்கள் திட்ட துவக்க விழா
ADDED : செப் 20, 2011 11:45 PM
அரியலூர்: செந்துறையில் பசுமை கரங்கள் திட்ட துவக்கவிழா நடந்தது.
அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள அறிஞர் அண்ணா கல்வி நிலைய வளாகத்தில், ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த பசுமை கரங்கள் திட்ட துவக்க விழாவுக்கு, அறிஞர் அண்ணா கல்வி நிலைய தாளாளர் கருப்பன் தலைமை வகித்தார். பசுமை கரங்கள் திட்டத்தை ஈஷா மைய நிர்வாகி கார்த்தி துவக்கி வைத்து, மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி விளக்கி பேசினார். தொடர்ந்து ஆசிரியர்கள், தொழிற் பயிற்சி மாணவர்கள் உள்பட, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஈஷா கிரியா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செந்துறை ஈஷா யோகா மையமும், அறிஞர் அண்ணா கல்வி நிலைய நிர்வாகத்தினரும் செய்தனர்.