/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போலீஸ் உதவி மையத்தில் வாழைப்பழ வியாபாரம்
/
போலீஸ் உதவி மையத்தில் வாழைப்பழ வியாபாரம்
ADDED : டிச 22, 2024 02:08 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் உதவி மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 2005ம் ஆண்டு ரோட்டரி சங்கம் சார்பில், கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
அதன் பின், அவ்வப்போது, உதவி மையம் பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் உதவி மையம் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி உதவி மையத்தின் உள்ளே வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களை வைத்துக்கொண்டும், வெளியே கடை அமைத்தும் விற்பனை செய்து வருகிறார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகள் சந்திப்பு, கடைவீதிகளில் உள்ள போலீசார் உதவி மையங்கள் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.
இதனை மதுப்பிரியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். உதவி மையங்களில் முறையாக போலீசாரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.