/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சீர்திருத்த பள்ளியிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்
/
சீர்திருத்த பள்ளியிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்
ADDED : ஏப் 20, 2025 11:42 PM
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு, தஞ்சாவூர், வண்டிக்கார தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன், ஒரு மாதத்திற்கு முன் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டான். நேற்று முன்தினம் மாலை, சீர்திருத்தப்பள்ளியில் இருந்து சிறுவன் தப்பினான்.
சீர்த்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர், தஞ்சாவூரில் உள்ள சிறுவன் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். சிறுவன் அங்கு செல்லவில்லை. சிறை கண்காணிப்பாளர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

