/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் ரவுடி கொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு
/
தஞ்சையில் ரவுடி கொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 27, 2024 02:29 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 35, மீன் வியாபாரியான இவர், போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது கொலை, அடிதடி உட்பட பல வழக்குகள் உள்ளன.
கரந்தை புற்று மாரியம்மன் கோவில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் இவர் தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, இவரை அப்பகுதிக்கு வந்த சிலர் அரிவாளால் வெட்டி தப்பினர். படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த திவாகர், 30, என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
திவாகர் மற்றும் அவரது நண்பர்கள் கந்தவேல், செல்வகுமார், பரத் ஆகியோர் அறிவழகனை வெட்டிக் கொன்றதாக வழக்குப் பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.