/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மழைநீர் வாய்க்காலில் விழுந்த குழந்தை பலி
/
மழைநீர் வாய்க்காலில் விழுந்த குழந்தை பலி
ADDED : டிச 15, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர், டிச. 15-
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த மீனவர் வினோத் - மோனிஷா தம்பதிக்கு ஹரிணி, 3, என்ற பெண் குழந்தையும், தர்னீஸ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தனர்.
மோனிஷா வீட்டின் உள்ளே நேற்று காலை சமையல் வேலை செய்து கொண்டு இருந்தார். வீட்டின் உள்ளே விளையாடி கொண்டிருந்த தர்னீஸ் வெளியே சென்றதை, தாய் கவனிக்கவில்லை.
மழையால், வீட்டின் முன் சேறும், சகதியும் இருந்தால், அதில் வழுக்கி விழுந்த குழந்தை, அருகில் மழைநீர் வடிக்கால் வாய்க்காலில் விழுந்தது.
சிறிது நேரம் கழித்து, மகன் தர்னீசை தேடி போது, வாய்க்காலில் இறந்து மிதந்ததை கண்டு, தாய் மோனிஷா அதிர்ச்சி அடைந்தார்.