/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை மாநகராட்சி மீது விஜிலென்சில் புகார் மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

ADDED : மே 02, 2025 02:44 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியில், 2017 முதல் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10.12 கோடி ரூபாயை, கூட்டுறவு கடன் சங்கத்திற்கு மாநகராட்சி செலுத்தாமல் உள்ளது.
இதனால், பணியாளர்களுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து, அபராத வட்டியுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதில், ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களும் உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், துாய்மை பணியாளர்களிடம் பிடித்த தொகையை முறைகேடு செய்த மாநகராட்சி அலுவலர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.