/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
காங்., மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனைகளில் 'அட்மிஷன்'
/
காங்., மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனைகளில் 'அட்மிஷன்'
காங்., மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனைகளில் 'அட்மிஷன்'
காங்., மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனைகளில் 'அட்மிஷன்'
ADDED : ஜன 01, 2025 01:10 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் நேற்று முன்தினம் மாலை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சரவணனை, தி.மு.க., கவுன்சிலர் தட்ணாமூர்த்தி தாக்கியதாகக் கூறி, நெஞ்சு வலிப்பதாக தரையில் விழுந்து அலறினார்.
பின் இரவு 8:00 மணிக்கு மேயர் சரவணன் மற்றும் கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி ஆகியோரை, தி.மு.க. மாவட்ட செயலர் கல்யாணசுந்தரம் அழைத்து பேசினர். இரவு 10:30 மணிக்கு மேயர் சரவணன், நெஞ்சு வலி ஏற்பட்டதாக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, ரத்த அழுத்தம் காரணமாக, தனியார் மருத்துமனையில் சேர்ந்தார்.
மேயர் சரவணன் கூறியதாவது:
தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி என்னை காலால் எட்டி உதைத்தார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த துணை மேயர் தமிழழகன் கையைப் பிடித்து இழுத்தார். அப்போது நெஞ்சுவலியால் கீழே விழுந்தேன். இதை நான் ஊடகங்களில் தான் பார்த்தேன்.
மயக்கம் தெளிந்து, நடந்த சம்பவம் குறித்து தி.மு.க., - எம்.பி.,யும், மாவட்ட செயலரான கல்யாணசுந்தரத்திடம் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
மேயர் எனது நெஞ்சில் கையால் குத்தினார். அதன் பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. பிறகு எங்கள் கட்சி மாவட்ட செயலர் கல்யாணசுந்தரத்தை சந்தித்து நடந்த நிகழ்வுகளை கூறி விட்டு வீட்டிற்கு சென்றேன்.
இருப்பினும் வலி அதிகமானதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். இதுவரை, மேயரின் மாண்புக்கு குறை வருவது போல நடந்து கொண்டது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் நேற்று மாலையில் மேயர் சரவணனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

