/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
விநாயகர் சிலை ஊர்வலம் ஆலோசனை கூட்டம் : அதிக சிலை பிரதிஷ்டை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
/
விநாயகர் சிலை ஊர்வலம் ஆலோசனை கூட்டம் : அதிக சிலை பிரதிஷ்டை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
விநாயகர் சிலை ஊர்வலம் ஆலோசனை கூட்டம் : அதிக சிலை பிரதிஷ்டை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
விநாயகர் சிலை ஊர்வலம் ஆலோசனை கூட்டம் : அதிக சிலை பிரதிஷ்டை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
ADDED : ஆக 26, 2011 01:27 AM
கும்பகோணம்: கும்பகோணம் கோட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட கலால் உதவி ஆணையரும், கும்பகோணம் ஆர்.டி.ஓ.,வுமான (பொது) முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் தாசில்தார்கள் கும்பகோணம் துரைராஜ், பாபநாசம் பாண்டியராஜன், திருவிடைமருதூர் (பொது) கலியபெருமாள், டி.எஸ்.பி.,க்கள் பாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், பழனிவேல், ஜோதிமகாலிங்கம், எஸ்.ஐ.,க்கள் கோவிந்தராஜ், வரலெட்சுமி, சுதா, மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ்., கண்ணன், சிவசேனா மாநில துணைத் தலைவர் திருவேங்கடம், மண்டல தலைவர் ராஜேந்திரன், மண்டல அமைப்பாளர் சரவணக்குமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார், விஸ்வரூப விநாயகர் சேவா சங்க குழு செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பரசுராமன், பெரிய பள்ளிவாசல் தலைவர் அப்துல்உசேன், செயலாளர் அயூப்கான் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்து அமைப்புகள் சார்பில் குருமூர்த்தி பேசுகையில், ''கும்பகோணம் நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. எனவே, புதிதாக விநாயகர் சிலைகளும் அமைக்கப்பட உள்ளது. 24 இடங்களில் மட்டுமே போலீஸ் துறையினர் அனுமதி தருகின்றனர். இது போதுமானதல்ல. எனவே, அதிக சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கி அனுமதிக்க வேண்டும். ஊர்வலம் முழுவதும் பட்டாசு வெடிக்கவும், யானையை ஊர்வலத்தில் கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும்,'' என்றார். இதற்கு பதிலளித்த டி.எஸ்.பி., சிவபாஸ்கர் பேசுகையில், ''புதிதாக சிலைகள் பிரதிஷ்டை செய்யவோ, ஊர்வலம் நடத்தவோ அரசு அனுமதி வழங்கவில்லை. அதே போல் ஊர்வலம் தொடங்கும் மற்றும் நிறைவடையும் இடத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு இந்து அமைப்பினர் அனைவரும் ஒன்றாக எங்களுக்கு கூடுதல் சிலைகள் வைக்க அரசிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆர்.டி.ஓ., ''புதிய சிலை வைப்பது தொடர்பாக நான் முடிவு செய்ய முடியாது. நாளை (26 ம் தேதி) கும்பகோணம் ரெகுலர் ஆர்.டி.ஓ., வந்துவிடுவார். அவரிடம் உங்களது கோரிக்கைகளை எழுத்து மூலமாக கொடுத்தால் அவர் மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்துவார்,'' என்றார்.இதையடுத்து அதிகாரிகள் மற்றும் இந்து, இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக வரும் 27ம் தேதி மீண்டும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கும்பகோணம் ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமையில் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்தனர்.