/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போன் மறு இணைப்பு மேளா செப்., 30 வரை நீடிப்பு: அதிகாரி
/
போன் மறு இணைப்பு மேளா செப்., 30 வரை நீடிப்பு: அதிகாரி
போன் மறு இணைப்பு மேளா செப்., 30 வரை நீடிப்பு: அதிகாரி
போன் மறு இணைப்பு மேளா செப்., 30 வரை நீடிப்பு: அதிகாரி
ADDED : செப் 23, 2011 01:17 AM
கும்பகோணம்: 'வாடிக்கையாளர்கள் வசதி கருதி துண்டிக்கப்பட்ட போன் மறு
இணைப்பு மேளா வருகிற 30ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என
பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் தொலைத் தொடர்பு
மாவட்ட பொதுமேலாளர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: கும்பகோணம்
தொலைத்தொடர்பு மாவட்டத்தில் துண்டிக்கப்பட்ட போன் மறு இணைப்பு மேளாவில்
கடந்த 1 ம்தேதி முதல் 15ம்தேதி வரை 500 வாடிக்கையாளர் கலந்து கொண்டு
பயன்பெற்றனர். வாடிக்கையாளர்களின் வசதியை முன்னிட்டு இந்த மேளா வருகிற
30ம்தேதி வரை இந்த மேளா நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பணம் செலுத்தி
பயன்படுத்தும் நிரந்தர போன் வசதியை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் பல்வேறு வகையான குறைந்த பட்ச
மதிப்புகளில் கார்டுகள் கிடைக்கின்றன. பி.எஸ்.என்.எல்., அனைத்து வசூல்
மையங்களிலும் எல்லாவிதமான டாப்-அப் மற்றும் ரீசார்ஜ் கார்டுகளும் கிடைக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிராட்பேண்டு வசதிக்கான கட்டணம் முன்பாக கட்டி
ஆறு மாதம் முதல் 12மாதங்கள் வரை சிறப்பு தள்ளுபடி பெறலாம். இந்த வசதி
பெறுவோருக்கு எப்.டபிள்யூ.பி. போன் இலவசமாக அளிக்கப்படுகிறது.