/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சென்னை சிறுமிக்கு கொடுமை டிரைவர், காதலனுக்கு 'போக்சோ'
/
சென்னை சிறுமிக்கு கொடுமை டிரைவர், காதலனுக்கு 'போக்சோ'
சென்னை சிறுமிக்கு கொடுமை டிரைவர், காதலனுக்கு 'போக்சோ'
சென்னை சிறுமிக்கு கொடுமை டிரைவர், காதலனுக்கு 'போக்சோ'
ADDED : பிப் 18, 2025 04:39 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூரில், 14 வயது சிறுமியை மூன்று நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர், சிறுமியை ஏமாற்றிய காதலன் போக்சோவில் கைதாகினர்.
தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் ஒருவருடன் அழுது கொண்டே நின்ற 14 வயது சிறுமியை, ரோந்து போலீசார் மீட்டு, வல்லம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தஞ்சாவூர் மாவட்டம், சின்னக்கோட்டைகாடை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெகதீஸ்வரன், 24, சென்னையில் வேலை பார்த்த போது, இந்த சிறுமியை காதலித்துள்ளார். அவர் சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் வந்தார். சிறுமியையும் தஞ்சாவூர் வர அழைத்துள்ளார்.
அதன்படி, பிப்., 13ல் தஞ்சாவூர் வந்த சிறுமி, ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்த போது, போனை எடுக்கவில்லை. இதனால் செய்வதறியாது நின்ற சிறுமியை அங்கிருந்த, லோடு ஆட்டோ டிரைவர் புவனேஸ்வரன், 30, காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி, சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
மூன்று நாட்கள் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின், சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக, பஸ் ஸ்டாண்ட் அழைத்து வந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
போக்சோ வழக்கில் புவனேஸ்வரனையும், ஜெகதீஸ்வரனையும் போலீசார் நேற்று கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.