ADDED : ஜன 04, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அருகே திருவையாறு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன், தன் தோழியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லிங்கத்தடி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை, 58, ஆசைவார்த்தை கூறி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, திருவையாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜதுரையை நேற்று கைது செய்தனர்.

