/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மின்னல் தாக்கி இறந்தோருக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 31, 2025 01:12 AM
தஞ்சாவூர்:  தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டம் துவங்கியதும், கடலுாரில் இறந்த பெண் விவசாயிகளுக்கு வழங்கிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
நெல் கொள்முதலில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை, விவசாயிகளுக்கு விரோதமாக இருப்பதாக கூறி, விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
க ரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது. ஆனால், கடலுார் மாவட்டத்தில், மின்னல் தாக்கி நான்கு பெண் விவசாயிகள் இறந்தனர்.  அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஏற்புடையது அல்ல. அரசு உடனே, இறந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, எவ்வித நிபந்தனையும் இன்றி மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.