/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து
/
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து
ADDED : ஏப் 25, 2025 01:27 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், 'ஏசி'யில் மின்கசிவாகி தீ விபத்து ஏற்பட்டது. பணியாளர்கள் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தஞ்சாவூர் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில், நேற்று காலை, 11:30 மணிக்கு, மகப்பேறு கட்டடத்தில் உள்ள கர்ப்பிணியர் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ள பகுதியில் கரும்புகையுடன் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு அறையில் இருந்த ஏசி.,யில் தீப்பிடித்து, மெத்தை மீது தீப்பொறி விழுந்ததால் தீ பரவியுள்ளது. செவிலியர்கள், பணியாளர்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர்.
ஆனாலும், கட்டடம் முழுதும் புகை மண்டலமானது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்தனர். உடனடியாக அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என, 54 பேர் மீட்கப்பட்டு, ஒருங்கிணைந்த பேருகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள், மின் இணைப்பை துண்டித்து, புகையை வெளியேற்றினர். கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி., ராஜாராம் ஆய்வு செய்தனர். இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

