/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெரிய சைஸ் குடிநீர் குழாய் திருடிய நான்கு பேர் கைது
/
பெரிய சைஸ் குடிநீர் குழாய் திருடிய நான்கு பேர் கைது
பெரிய சைஸ் குடிநீர் குழாய் திருடிய நான்கு பேர் கைது
பெரிய சைஸ் குடிநீர் குழாய் திருடிய நான்கு பேர் கைது
ADDED : ஜன 07, 2025 12:48 AM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து நாகப்பட்டினம் வரை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக குழாய்கள் புதைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், புத்துார் - குடிக்காடு இடையே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த, பெரிய அளவிலான 13 ராட்சத குழாய்களை, ஜே.சி.பி., இயந்திரத்துடன், இரண்டு லாரிகளில் நேற்று முன்தினம் சிலர் ஏற்றி சென்றனர்.
கூட்டு குடிநீர் திட்ட இன்ஜினியர் பாஸ்கர், கபிஸ்தலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று சதீஷ்குமார், 39, ரஞ்சித்குமார், 28, ராஜேஷ், 22, யுவராஜ், 22, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் மூன்று குழாய்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர். மீதமுள்ள குழாய்களை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

