/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டை
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டை
ADDED : நவ 07, 2025 11:58 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டு பழமையானது. தற்போது, 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர், இப்பள்ளி யில் படித்தவர்கள்.
கடந்த 2023ல் பள்ளியின் நுாற்றாண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஆளுங்கட்சியினர் சிலர் பள்ளி நுாற்றாண்டு விழாவிற்கு முட்டுக்கட்டை போடுவதாக முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து முன்னாள் மாணவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான ராஜேந்திரன் கூறுகையில், ''நுாற்றாண்டு விழாவை நவ., 14ம் தேதி நடத்த அமைச்சர்கள் நேரு, மகேஷ், முரசொலி எம்.பி., முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசியுள்ளேன்.
''ஆனால், பள்ளி மேலாண்மை குழுவுக்கும், ஆளுங்கட்சிக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பள்ளிக்கல்வித்துறை விழாவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது,'' என்றார்.

