sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளிகள்

/

தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளிகள்

தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளிகள்

தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளிகள்


ADDED : மே 11, 2011 02:15 AM

Google News

ADDED : மே 11, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளே அதிக தேர்ச்சி விழுக்காட்டை பெற்றுள்ளது.

கும்பகோணம் கல்வி மாவட்டம் கடந்த 2009 ம் ஆண்டு தஞ்சை கல்வி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி கல்வி மாவட்டமாக உருவானது. கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 23 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவி பெரும் பள்ளிகள், ஐந்து சுய நிதி பள்ளிகள், ஒரு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, 20 மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் 24 மையங்களில் 3,723 மாணவர்களும், 5,120 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில்,3,365 மாணவர்களும், 4,722 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92 சதவீதம், மாணவிகள் சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கும்பகோணம் கல்வி மாவட்டத்திலேயே கும்பகோணம் கிரஸ்த கிங் பள்ளி மாணவி டெபோரா ஆயிரத்து 176 மார்க் பெற்று முதலிடமும், அதே பள்ளி மாணவர் ரிஷ்வந்த் 1,175 மார்க் பெற்று இரண்டாமிடமும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சரண்யா 1,174 மார்க் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளார். தாராசுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, கீழகொட்டையூர் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளி, இதயத்துல்லாரிஸ்வான் பொது அராபிக் மேல்நிலைப் பள்ளி, கடிச்சம்பாடி மினர்வா மேல்நிலைப் பள்ளி, கருப்பூர் மாதா உடல் ஊனமுற்றோர் மேல்நிலைப் பள்ளி, மேலக்காவேரி மைதீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அய்யம்பேட்டை ஸ்டார்லைன் மெட்ரிக் பள்ளி, அல்முபீன் மெட்ரிக் பள்ளி, கபிஸ்தலம் மணி மெட்ரிக் பள்ளி, கும்பகோணம் ஸ்ரீமாதா மெட்ரிக் பள்ளி, சி.பி.வித்யாமந்தீர் மெட்ரிக் பள்ளி, அம்மாபேட்டை தூயமெர்ஷியா மேல்நிலைப் பள்ளி ஆகியவை நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 23 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 16 பள்ளிகள் 80 சதவீதத்துக்கும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 7 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் ஆவணியாபுரம் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி மாணவன் மணிகண்டன் மின்சாதனங்கள் பராமரித்தல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பழுதுபார்த்தல் பாடப்பிரிவில் 199 மார்க் பெற்று மாநிலத்தில் மூன்றாவதாக பெற்றுள்ளார். கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மாணவன் குமரன் தஞ்சை மாவட்டத்திலேயே பொருளியலில் 200க்கு 200 மார்க் பெற்று முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ஒருவர் மட்டுமே மாவட்ட அளவில் பொருளியலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றவர். அரசு பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விவரம்: தாராசுரம் அரசு மேல்நிலைப் பள்ளி (100%), கும்பகோணம் அறிஞர் அண்ணா பள்ளி (98%), சுவாமிமலை பள்ளி (98%), பட்டீஸ்வரம் அண்ணா பள்ளி (97.17%), திருபுவனம் பள்ளி (97%), அய்யம்பேட்டை பள்ளி (95.2%), வீரமாங்குடி பள்ளி (94%), பாபநாசம் பெண்கள் பள்ளி (92%), நாச்சியார்கோயில் பெண்கள் பள்ளி (91%), பாபநாசம் ஆண்கள் பள்ளி (91%), திருநாகேஸ்வரம் பள்ளி (91%), சாலியமங்கலம் பள்ளி (89%), கும்பகோணம் பெண்கள் பள்ளி (83%), நாச்சியார்கோயில் ஆண்கள் பள்ளி (82%), திருப்புறம்பியம் பள்ளி (82%), சோழபுரம் பள்ளி (81%).






      Dinamalar
      Follow us