'நெல் கொள்முதல் நிலையங்களில்மூட்டைக்கு ரூ.50 பெறுவது உண்மை'
'நெல் கொள்முதல் நிலையங்களில்மூட்டைக்கு ரூ.50 பெறுவது உண்மை'
ADDED : ஜூலை 26, 2026 10:12 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதுாக்கும் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யு.சி.,யின் 40-வது ஆண்டு மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில பொதுச்செயலர் சந்திரகுமார் கூறியதாவது:
தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், வடலுாரில் நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து, மூட்டைக்கு, 50 ரூபாய் வாங்கியதாக பட்டியல் எழுத்தரை சஸ்பெண்ட் செய்துள்ளார். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடம் இது போன்று மூட்டைக்கு, 50 ரூபாய் பெற்று கொள்முதல் செய்யப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை. நிர்வாக குறைபாடுகளாலும் தொழிலாளர்களின் மீது சுமத்தப்படுகின்ற நியாயமற்ற எடை இழப்பு, நெல் ஏற்றி அனுப்புவதற்கு, கூடுதலாக லாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தாலும், விவசாயிகளிடம் பணம் பெற்று பங்கீடு செய்து கொள்கின்ற நிலை தொடர்கிறது. எனவே, உணவுத்துறை அமைச்சரின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல, அனைத்து மட்டங்களிலும் விரிவாக ஆய்வு செய்து, ஒட்டுமொத்தமாக தவறுகளை களைவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், 25 லட்சம் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளது. மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் சூழல் இருப்பதால் விரிவான திட்டம் தயாரித்து, உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
