/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பள்ளியின் வாசலில் வைத்து பிளஸ் 2 மாணவன் கடத்தல்?
/
பள்ளியின் வாசலில் வைத்து பிளஸ் 2 மாணவன் கடத்தல்?
பள்ளியின் வாசலில் வைத்து பிளஸ் 2 மாணவன் கடத்தல்?
பள்ளியின் வாசலில் வைத்து பிளஸ் 2 மாணவன் கடத்தல்?
ADDED : டிச 19, 2025 04:51 AM
தஞ்சாவூர்: பள்ளியின் வாசலில் வைத்து, பிளஸ் 2 மாணவனை அடித்து, பைக்கில் கடத்திய இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர், கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்; லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்களின், 17 வயது மகன் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியே வந்தபோது, இரண்டு பைக்குகளில் வந்த இளைஞர் கும்பல், அவரை அடித்து இழுத்து பைக்கில் ஏற்றி சென்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர், மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். மாணவனின் பெற்றோர், உறவினர்கள், பள்ளி முன் திரண்டனர்.
தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், பைக்கில் ஏற்றி சென்றவர்கள், பிளஸ் 2 மாணவனை, வீட்டில் இறக்கி விட்டு சென்றது தெரிந்தது. அந்த மாணவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த டிச., 4ல் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர், பிளஸ் ௧ மாணவர் சிலர் தாக்கியதில் இறந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவர் கடத்தப்பட்ட விவகாரம் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

