sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மடத்தின் சொத்தை அபகரிக்கவே குருமகா சன்னிதானம் திருமணம் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமி தகவல்

/

மடத்தின் சொத்தை அபகரிக்கவே குருமகா சன்னிதானம் திருமணம் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமி தகவல்

மடத்தின் சொத்தை அபகரிக்கவே குருமகா சன்னிதானம் திருமணம் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமி தகவல்

மடத்தின் சொத்தை அபகரிக்கவே குருமகா சன்னிதானம் திருமணம் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமி தகவல்


ADDED : நவ 08, 2024 12:19 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள், பெங்களூரு பெண்ணை திருமணம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீகாரியமாக நியமிக்கப்பட்டுள்ள சுவாமிநாத சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆதீனத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை தெரிவிக்கிறேன். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண்ணை, ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்புடையதல்ல


அந்தப் பெண் குறித்து விசாரித்த வகையில், பல குற்றப் பின்னணி உடையவர். அவருக்கு அதிகளவில் சொத்துக்கள் இருப்பதாகக் கூறி, பலரை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

கிட்டத்தட்ட, 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்க அவர் திட்டம் தீட்டி, இந்த பதிவு திருமணத்தை செய்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல. இது, ஆதீன சம்பிரதாயத்திற்கு எதிரானது.

எனவே, சூரியனார் கோவில் ஆதீனத்தின் மாண்பை போற்றி பாதுகாக்கும் வகையில், சைவ ஆதீன குருமகா சன்னிதானங்கள் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.

பெங்களூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை முழுமையாக சேகரித்து, திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,யிடம் புகாராக அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகாலிங்க சுவாமி பதில்


ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள் கூறியதாவது:

மடத்தின் சம்பிரதாயப்படி, திருமணமானவர்கள் குரு மகா சன்னிதானங்களாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை. இதுகுறித்து அறநிலைய துறைக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். ஆதீன குருமகா சன்னிதானங்களுக்கு என, தனி அதிகாரம் உள்ளது.

நான் ஆதீனமாக பதவி ஏற்றது முதல் சூரியனார் கோவில் ஆதீன தலைமை மடத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளேன்.

மடத்தின் சொத்துக்களை காக்க, பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். அவற்றை முறையாக பாதுகாத்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கடமையை அவர்களது ஒத்துழைப்போடு செய்து வருகிறேன்.

திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து நீக்கப்பட்ட சுவாமிநாத சுவாமிகளை, நான் மடத்தில் ஸ்ரீ கார்யமாக நியமித்தேன். அவர் இங்கு தங்குவதில்லை. அவர் தன் வீட்டிற்கு சென்ற பின், தன் வேடத்தை மாற்றிக் கொள்வார். அவர் ஏற்கனவே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு.

இருப்பினும், அவர் ஆன்மிக பணிகளை செய்ய விரும்பியதால், அதுகுறித்து கவனத்தில் கொள்ளாமல் பணிகளை செய்ய அனுமதித்தேன். சுவாமிநாத சுவாமியை யாரோ தவறாக இயக்குகின்றனர். குருவின் கட்டளையை ஏற்று அவர் நடப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us