/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிறுவனை பாலியல் தொல்லை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
/
சிறுவனை பாலியல் தொல்லை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : பிப் 13, 2025 03:05 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர், 53, மளிகை கடைக்காரர்.இவர், 2022ம் ஆண்டு கடையில் இருந்த போது, கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 13 வயது சிறுவனிடம், ஒரு பொருளை கொடுத்து, குடோனில் வைக்குமாறு கூறியுள்ளார்.
சிறுவன் பொருளை எடுத்துக்கொண்டு குடோனுக்கு சென்றார். அப்போது, அவனை பின்தொடர்ந்து சென்ற அபுபக்கர், சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். சிறுவன் அலறியடித்து ஓடி வந்து பெற்றோரிடம் கூறி உள்ளார். இது குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அபுபக்கரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, தஞ்சாவூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி தமிழரசி விசாரித்து, அபுபக்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

