/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிறுவனுக்கு தொல்லை ஆசிரியருக்கு 'போக்சோ'
/
சிறுவனுக்கு தொல்லை ஆசிரியருக்கு 'போக்சோ'
ADDED : நவ 09, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 29; தனியார் பள்ளி வரலாறு ஆசிரியர். மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
சுவாமிமலையில், அக்., 29ம் தேதி கடைக்கு பால் வாங்க சென்ற 15 வயது சிறுவனை, பாலசுப்பிரமணியின் பைக்கில் ஏற்றி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அங்கிருந்து தப்பிய சிறுவன், பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். நேற்றுமுன்தினம் சுவாமிமலை போலீசில், பெற்றோர் அளித்த புகாரில், பாலசுப்பிரமணியனை போக்சோவில் கைது செய்தனர்.

