/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவியர் பஸ் மறியல்
/
கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவியர் பஸ் மறியல்
ADDED : அக் 30, 2025 03:05 AM
திருவோணம்: கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி, மாணவியர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் காலை 7:30 மற்றும் 8:30 மணிக்கு கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவோணம், ஊரணிபுரம், சில்லத்துார், வெட்டிக்காடு வழியாக இ யக்கப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் இருந்து, ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலை கல்லுாரிக்கு செல்லும் மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இன்றி, படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதில், பாதிக்கப்படும் மாணவியர் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மாணவியர் நேற்று காலை, கறம்பக்குடியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த அரசு டவுன் பஸ்சை, வெட்டிகாடில் சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஒரத்தநாடு போக்குவரத்து அலுவலர்கள், கூடுதல் பஸ் இயக்கப்படும் என உறுதியளித்தனர்; போராட்டத்தை மாணவியர் கைவிட்டனர்.

