/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சத்துணவு அமைப்பாளர் மரணம்; கணவரிடம் போலீஸ் விசாரணை
/
சத்துணவு அமைப்பாளர் மரணம்; கணவரிடம் போலீஸ் விசாரணை
சத்துணவு அமைப்பாளர் மரணம்; கணவரிடம் போலீஸ் விசாரணை
சத்துணவு அமைப்பாளர் மரணம்; கணவரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 22, 2025 07:35 AM

தஞ்சாவூர் : பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளர் மர்ம மரணம் குறித்து, அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த, ராமமூர்த்தி, 45, டிரைவர். இவரது மனைவி கற்பகசுந்தரி, 32. இவர் ஒட்டங்காடு அரசு உதவி பெறும் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, 13, மற்றும் 10 வயதில் மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கற்பகசுந்தரி வீட்டிற்குச் சென்ற உறவினர்கள், மயங்கிக் கிடந்தவரை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, கற்பகசுந்தரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குடிபோதையில் கணவர் அடித்துக் கொன்றிருக்கலாம் எனக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கற்பகசுந்தரியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு நடத்தினர். ராமமூர்த்தியை பிடித்து, திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.