ADDED : ஜூலை 30, 2026 11:04 PM

அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: தமிழகத்தில் இன்று முதல் நடப்பதாக இருந்த கறிக்கோழி விற்பனை முடக்க போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பிராய்லர் கோழி வளர்ப்போர், கோழியை விற்பனைக்கு அனுப்பும் போது, தீவனங்களை வழங்குவதால், கோழி எடை அதிகரிப்பதாகவும், இந்த நடைமுறையை மாற்ற வலியுறுத்தியும், இன்று முதல் கறிக்கோழி விற்பனையை முடக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிராய்லர் ஒருங்கிணைப்புகுழு சார்பில், அரசின் வழிகாட்டுதலான கோழி வெட்டுவதற்கு 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பு தீவன கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, தஞ்சாவூரில், தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு தலைவர் துரைராஜ் அறிவித்தார்.
