/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அரசு மருத்துவமனையில் சிறைக்கைதி தற்கொலை
/
அரசு மருத்துவமனையில் சிறைக்கைதி தற்கொலை
ADDED : அக் 13, 2024 07:45 AM
புதுக்கோட்டை, : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு நடுக்காவேரி அருகே மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 46; பாலியல் வழக்கில், கடந்த வாரம் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர், புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வலிப்பு நோய் ஏற்பட்டு, கடந்த 5ம் தேதி முதல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு பக்கத்து படுக்கையில் இருந்த ஒருவர், பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, அந்த நபர் சாப்பிட்ட பூச்சி மருந்து மாதிரியை மருத்துவர்கள் அங்கு வைத்திருந்தனர். அதை நேற்று காலை ரமேஷ் எடுத்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார். கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு கைதி
புதுக்கோட்டை சிறையில் இருந்த சக்திவேல், 46, என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்த வேப்ப மரத்தில் ஏறி அங்கிருந்து கீழே குதித்து, தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை சிறைக் காவலர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.