/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
டாஸ்மாக் கடை வேண்டும் தஞ்சை அருகே போராட்டம்
/
டாஸ்மாக் கடை வேண்டும் தஞ்சை அருகே போராட்டம்
ADDED : ஆக 05, 2025 05:51 AM
பெருமகளூர்: தஞ்சை அருகே பெருமகளூரில், 'டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்' என, வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சியில், 'போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம் வேண்டும். மின்வாரிய அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் வேண்டும். சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
'டாஸ்மாக் இல்லாததால், கள்ள சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக் கடை திறக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருமகளூர் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
பேச்சு நடத்திய பேராவூரணி தாசில்தார் சுப்பிரமணியன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பொதுமக்கள் கூறுகையில், 'கள்ளச்சந்தையில், 200 ரூபாய் வரை மது விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர் சென்று குடித்து விட்டு, ஊர் திரும்புவோர் விபத்தில் சிக்குகின்றனர். மதுக்கடை அவசியம் தேவை' என்றனர்.