/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'குடி'மகன்கள் வராததால் 'குட்டிச்சுவர்' ஆன வியாபாரம் அகற்றிய 'டாஸ்மாக்'கை திறக்க போராட்டம்
/
'குடி'மகன்கள் வராததால் 'குட்டிச்சுவர்' ஆன வியாபாரம் அகற்றிய 'டாஸ்மாக்'கை திறக்க போராட்டம்
'குடி'மகன்கள் வராததால் 'குட்டிச்சுவர்' ஆன வியாபாரம் அகற்றிய 'டாஸ்மாக்'கை திறக்க போராட்டம்
'குடி'மகன்கள் வராததால் 'குட்டிச்சுவர்' ஆன வியாபாரம் அகற்றிய 'டாஸ்மாக்'கை திறக்க போராட்டம்
ADDED : பிப் 01, 2025 01:56 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சியில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் கோரியும் வர்த்தகர்கள், பெண்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் தனி சிறப்பாக, மதுக்கடை அவசியம் வேண்டும்; மதுக்கடையை அகற்றியதால், கடை வீதிகள் வெறிச்சோடி, வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, வர்த்தகர்களுடன் இணைந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், அவ்வழியாக சென்ற பலரும் ஆச்சரியமடைந்தனர்.
இதுகுறித்து பிரேமா என்பவர் கூறியதாவது:
எங்கள் கடைத்தெருவில் டாஸ்மாக் கடை இருந்தது. இதனால், 145 ரூபாய் செலவில் முடிந்து விடும். தற்போது, குவார்ட்டர் 'பிளாக்'கில் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாஸ்மாக் கடை இல்லாத சூழலில், எங்கள் பகுதியில் இருந்து, 15 கி.மீ., துாரம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருவாப்பாடிக்கு சென்று மது அருந்தி விட்டு வருவதால் விபத்து நடக்கிறது.
டாஸ்மாக் இல்லாமல் கடை வீதியில் பெரிய அளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மதுக்கடை அவசியம் வேண்டும். அடிப்படை வசதிகளுடன், மதுக்கடை கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், மறியல் செய்வோம்; தாலுகா அலுவலகம் முன் போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பக்கிரிசாமி கூறியதாவது:
எங்கள் ஊரில் 1982ல் இருந்த பத்திரவுப்பதிவு அலுவலகத்தை மூடினர். ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் வேண்டும். மதுவை எல்லோரும் குடிக்க துவங்கி விட்டனர். எங்கள் பகுதியில் கடை இல்லாத சூழலில், மது அருந்த பக்கத்து மாவட்டத்திற்கு செல்கின்றனர்.
இதனால், அவர்கள் மட்டுமின்றி, பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கின்றன. உள்ளூரில் கடை இருந்தால் குடித்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவர். மதுக்கடை கோரிக்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.