/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரவுடி மனைவிக்கு காதல் துாது; இளைஞரை கொன்ற 5 பேர் கைது
/
ரவுடி மனைவிக்கு காதல் துாது; இளைஞரை கொன்ற 5 பேர் கைது
ரவுடி மனைவிக்கு காதல் துாது; இளைஞரை கொன்ற 5 பேர் கைது
ரவுடி மனைவிக்கு காதல் துாது; இளைஞரை கொன்ற 5 பேர் கைது
ADDED : டிச 11, 2025 05:15 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி, கீழத்தெருவை சேர்ந்தவர் புகழேந்தி, 31; கூரியர் டெலிவரி ஊழியர்.
இந்நிலையில், மருதாநல்லுார், கரிகுளத்தெருவை சேர்ந்த ரவுடியான சிபிசக்கரவர்த்தியின் மனைவிக்கு, சில நாட்களாக ஆசை வார்த்தைகளை, 'வாட்ஸாப்'பில் அனுப்பி வந்துள்ளார்.
இது குறித்து, தகவலறிந்த சிபிசக்கரவர்த்தி, 33, மற்றும் அவரது நண்பர்கள் சிலர், டிச., 8ம் தேதி, புகழேந்தியை, சிவபுரம் புறவழி சாலையில் தாக்கினர்.
காயமடைந்த புகழேந்தி, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது குறித்து, அவரது உறவினர்கள் புகாரின்படி, நாச்சியார்கோவில் போலீசார், சிபிசக்கரவர்த்தி, ஹரிஹரசுதன், 26, கும்பகோணத்தை சேர்ந்த கிருஷ்ணா, 33, முல்லை நகரை சேர்ந்த விக்னேஷ், 26, திருவாரூரைச் சேர்ந்த குபேரன், 27, ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.