/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரூ.2 கோடி போதைப்பொருள் கடற்கரையில் கரை ஒதுங்கியது
/
ரூ.2 கோடி போதைப்பொருள் கடற்கரையில் கரை ஒதுங்கியது
ADDED : அக் 26, 2024 08:46 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கடற்கரையில், பெரிய பாலித்தீன் பையில், மர்ம பொருள் கரை ஒதுங்கி கிடப்பதாக, கடலோர காவல் குழுமத்திற்கு மீனவர்கள் சிலர் தகவல் அளித்தனர்.
பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பொருளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
பாலித்தீன் பையில், 900 கிராம் மெத்தாபெட்டமைன் என்ற போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு, 2 கோடி ரூபாய்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை, கடலோ காவல் குழுத்தினர், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர் கூறியதாவது:
கடல் வழியாக மெத்தாபெட்டாமைன் கடத்தல் அதிகளவில் நடந்து வரும் நிலையில், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் போன்ற, 32 மீனவ கிராமங்களில் இதுவரை இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பாக புகார் எழுந்தது இல்லை என, கடலோர காவல் குழுத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடத்தல்காரர்கள் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை சில நேரங்களில் கடற்கரையில் புதைத்து வைப்பது உண்டு. கடத்தல் கும்பல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.