/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் நிலம் அபகரிப்பு முயற்சி: 4 பேர் கைது
/
ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் நிலம் அபகரிப்பு முயற்சி: 4 பேர் கைது
ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் நிலம் அபகரிப்பு முயற்சி: 4 பேர் கைது
ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் நிலம் அபகரிப்பு முயற்சி: 4 பேர் கைது
ADDED : பிப் 10, 2025 06:52 AM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், மேலவழுத்துார் பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் அவரது போட்டோவை அகற்றி, திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்த உஸ்மான் என்பவர், தன் போட்டோவை வைத்து போலி ஆதார் அட்டை தயார் செய்துள்ளார்.
அந்த போலி ஆதார் அட்டையால், பொன்மான்மேய்ந்தநல்லுாரில் சேக் தாவூதுக்குச் சொந்தமான, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை, 2023, ஜன., 2ல் ஆவண பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த சேக் தாவூது குடும்பத்தினர், பாபநாசம், சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையிட்டனர். பாபநாசம் சார் பதிவாளர் காவியா, சோதனை செய்து, போலியான ஆவணங்களால் பதிவு செய்யப்பட்டத்தை கண்டறிந்தார். அவர், 2024, செப்., 27ல் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் தொடர் விசாரணையில், பாபநாசம் அருகே பண்டாரவடை முகம்மது யூசுப்அலி, 50, திருச்சி காஜாபேட்டையை சேர்ந்த உஸ்மான், 60, திருப்பாலத்துறை அப்துல்காதர், 58, தஞ்சாவூர் ராஜசேகரன், 37, ஆகிய நான்கு பேரும் இணைந்து, பல்வேறு போலியான ஆவணங்களை தயார் செய்து, ஷேக் தாவூத் நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து பாபநாசம் டி.எஸ்.பி., முருகவேல், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோர், போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முகம்மது யூசுப் அலி, உஸ்மான், அப்துல்காதர், ராஜசேகரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

