/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கடல் பசு மீட்பு: மீனவர்களுக்கு பாராட்டு
/
கடல் பசு மீட்பு: மீனவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 11, 2024 12:24 AM

தஞ்சாவூர் ; தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நேற்று அதிகாலை, 20 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையில், 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடல் பசு சிக்கியது.
உடனே, அதை பத்திரமாக மீட்ட மீனவர்கள், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வனவர் சிவசங்கர் உள்ளிட்டோர் கீழத்தோட்டத்திற்கு வந்தனர்.
மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவில், வனத்துறை அலுவலர்கள் கடல்பசுவை சோதனை செய்தனர். கடல்பசு நல்ல நிலையில் இருந்தது. மீனவர்கள், வனத்துறை உதவியுடன் மீண்டும் நல்ல நிலையில் கடல் பசுவை கடலுக்குள் விட்டனர்.
கடல்பசுவை உயிருடன் விட்ட மீனவர்களுக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.