/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கல்லுாரி கழிப்பறையில் குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய மாணவியால் அதிர்ச்சி
/
கல்லுாரி கழிப்பறையில் குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய மாணவியால் அதிர்ச்சி
கல்லுாரி கழிப்பறையில் குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய மாணவியால் அதிர்ச்சி
கல்லுாரி கழிப்பறையில் குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய மாணவியால் அதிர்ச்சி
ADDED : பிப் 02, 2025 01:47 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும், 20 வயது மாணவி, நேற்று முன்தினம் வகுப்பறையில் இருந்தபோது, வயிறு வலிப்பதாகக் கூறி கழிப்பறைக்கு சென்றார்.
பின், வெகுநேரம் கழித்து மீண்டும் வகுப்பிற்கு வந்த மாணவி மிகுந்த சோர்வாகவும், மாணவி ஆடையில் ரத்தக்கறையும் இருந்துள்ளது.
இதுகுறித்து சக மாணவியர் அந்த மாணவியிடம் கேட்டபோது, மாதவிடாய் ஏற்பட்டதாக சமாளித்துள்ளார். சிறிது நேரத்தில், அந்த மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.
உடனே, பேராசிரியர்கள், சக மாணவியர், மயங்கிய மாணவியை, 108 ஆம்புலன்சில் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரசவித்ததையும், அதன் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக் கேட்டு பேராசிரியர்கள், மாணவியர் அதிர்ந்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவியிடம் டாக்டர்கள், பேராசிரியர்கள் விசாரித்தபோது, கழிப்பறை அருகே உள்ள ஒரு குப்பைத் தொட்டியில், குழந்தையையும், தொப்புள் கொடியையும் வீசியதாக தெரிவித்தார்.
உடனே சென்று குப்பைத் தொட்டியில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்சிசுவை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்தனர். தற்போது மாணவிக்கும், குழந்தைக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்த அனைத்து மகளிர் போலீசார் நேற்று நடத்திய விசாரணையில், மாணவியும், அவரது உறவினரும் சில ஆண்டுகளாக காதலித்ததும், நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது.
வயிறு பெரிதாக இருப்பது குறித்து வீட்டிலும், சக மாணவியரும் கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி மறைத்து வந்துள்ளார். கர்ப்பம் வெளியில் தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்ற எண்ணத்தில், பிரசவ வலி வந்தால் என்ன செய்வதென யு டியூப் பார்த்து, பிறந்த சிசு என்றுகூட பாராமல், சிசுவை குப்பைத் தொட்டியில் வீசி உள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.