/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அரசு பள்ளியில் மோதல் மாணவர் மண்டை உடைப்பு
/
அரசு பள்ளியில் மோதல் மாணவர் மண்டை உடைப்பு
ADDED : டிச 06, 2025 02:06 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம், அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே முன் விரோதம் காரணமாக, மூன்று மாதத்திற்கு முன் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, பள்ளி நிர்வாகம் தலையிட்டு, இரு தரப்பினரிடையே பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தியது.
தொடர்ந்து, டிச., 3ம் தேதி, மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி கழிப்பறையில், மீண்டும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிளஸ் 1 மாணவர்கள், 14க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம், பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதி வழியாக வந்த, பிளஸ் 2 மாணவரை கட்டையால் தாக்கினர்.
இதில், பிளஸ் 2 மாணவருக்கு மண்டை உடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவரின் பெற்றோர், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் 15 மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

