/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மேகதாது அணை திட்டம் வருமா, வராதா? காவிரி ஆணைய தலைவர் மழுப்பல் பதில்
/
மேகதாது அணை திட்டம் வருமா, வராதா? காவிரி ஆணைய தலைவர் மழுப்பல் பதில்
மேகதாது அணை திட்டம் வருமா, வராதா? காவிரி ஆணைய தலைவர் மழுப்பல் பதில்
மேகதாது அணை திட்டம் வருமா, வராதா? காவிரி ஆணைய தலைவர் மழுப்பல் பதில்
ADDED : டிச 06, 2025 02:03 AM

தஞ்சாவூர்: “கர்நாடக அரசு சில ஆவணங்களை அளித்த பின்னரே மேகதாது அணை திட்டம் வருமா, வராதா எனக்கூற முடியும். தற்போதைய நிலையில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை,” என, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறினார்.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அணைக்கு வரும் நீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவு, அணையின் கட்டுமானம் குறித்து தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, காவிரி மேலாண்மை ஆணைய இயக்குநர் முரளி, தமிழக நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
அப்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பாண்டியன், ஹல்தரை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சட்ட விரோதமாக அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணானது மட்டு மின்றி, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் முடக்கும் வகையில் உள்ளது.
இது குறித்து ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டி உபரிநீர் கடலுக்கு செல்வதை தடுத்து, மேட்டூர் அணை மூலமாக பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
பின், ஹல்தர் அளித்த பேட்டி:
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசின் அறிக்கை, இரண்டு ஆண்டுகளாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இருந்தது. மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான சாத்திய கூறு முழுமையடையவில்லை.
அணையின் தொழில்நுட்ப மற்றும் வணிக சாத்தியக்கூறுகள் முழுமையாக நிறுவப்படாததால், மீண்டும் மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பியுள்ளோம். கர்நாடக அரசு முன்மொழிந்த இந்த திட்டத்தின் தொழில்நுட்பம், முதலீட்டுக்கான தகுதியானதா என்பதை மீண்டும் உட்படுத்த வேண்டும்.
இதற்கான ஆவணங்களை கர்நாடக அரசு வழங்கிய பின் தான், மேகதாது அணை திட்டம் வருமா, வராதா எனக்கூற முடியும். தற்போதைய நிலையில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

