ADDED : அக் 09, 2011 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் துறையூர் அங்காடியை கூட்டுறவு சார்பதிவாளர்கள் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை போலிபட்டியல் மூலம் விற்பனை செய்ததும், ரூ. ஆறாயிரத்து 539 க்கு இந்த விற்பனை செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரேசன் கடை விற்பனையாளர் கிருஷ்ணகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

