/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் வெளியானது டெண்டர் அறிவிப்பு
/
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் வெளியானது டெண்டர் அறிவிப்பு
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் வெளியானது டெண்டர் அறிவிப்பு
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் வெளியானது டெண்டர் அறிவிப்பு
ADDED : டிச 29, 2025 07:02 AM

தஞ்சாவூர்: தஞ்சையில், 51 கோடி ரூபாயில், சோழர்கள் அருங்காட்சியகம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியானது. பணிகளை இரு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2023ம் ஆண்டு, மார்ச் 20ல், சட்டசபையில், 'தஞ்சாவூரில் சோழர்கள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக, தஞ்சாவூர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் பின்புறம், 12 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இதில், 5 ஏக்கரில் அருங்காட்சியம் கட்டடம் அமைத்து, சோழர்களின் பொக்கிஷங்களை வைக்க திட்டமிடப்பட்டது.
பின், இரண்டு ஆண்டுகளாக அருங்காட்சியகம் தொடர்பான எந்த பணியும் துவங்கவில்லை.
இந்நிலையில், சோழர் அருங்காட்சியகத்தை அமைக்க, தமிழக பொதுப்பணித்துறையின் பாரம்பரிய பிரிவு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதில், 51 கோடி ரூபாயில், அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரும் விண்ணப்பத்தை, வரும் ஜன., 7க்குள் அனுப்ப வேண்டும்; திட்டப் பணிகளை இரண்டு ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

